search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார்சைக்கிள் விபத்து"

    மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஆப்பக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 48). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டினம்.

    தற்போது சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் ஈரோடு பாராளுமன்ற தொகுதி ஓட்டு பதிவு எந்திரங்கள் உள்ள சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவர் பணி முடித்து மோட்டார் சைக்கிளில் தனது சொந்த ஊரான மேட்டூர் தங்கமாபுரிபட்டினம் சென்று கொண்டிருந்தார்.

    மேட்டூர் அருகே நவப்பட்டி என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு ஈச்சேர் வேன் எதிர்பாராத விதமாக மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் அவரது தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் உடல் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    பலியான கோபால கிருஷ்ணனுக்கு சுஜாதா(46) என்ற மனைவியும் சஞ்ஜய் என்ற மகனும் சஞ்சனா என்ற மகளும் உள்ளனர்.

    விபத்து குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 20). இவரது நண்பர் குன்னூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (17). இருவரும் கூலி தொழிலாளிகள்.

    பாலகிருஷ்ணன் மேட்டுப்பாளையம்-காரமடை ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் தவணை முறையில் பைக் வாங்கியிருந்தார்.

    இதற்கான பணத்தை செலுத்துவதற்காக பாலகிருஷ்ணன் தனது நண்பருடன் பைக்கில் மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டார்.

    அங்கு தவணை தொகையினை செலுத்திவிட்டு இருவரும் மீண்டும் வீடு திரும்பினர். மேட்டுப்பாளையம்- ஊட்டி மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது குன்னூரில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியது.

    இதில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்,கிருஷ்டோபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் இறந்த பால கிருஷ்ணன், ஸ்ரீகாந்த் ஆகியோரின் உடலைப்பார்த்து உறவினர்கள் கதறியழுத காட்சி காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
    மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியானார். சிறுவன் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கன்னிவாடி:

    சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடை கிராமத்தை சேர்ந்த மரியராஜ் மகன் ஜான்ஹென்றி (வயது 18). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். நேற்று இவர் கன்னிவாடி அருகே கரிசல்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஸ்கூட்டரில் வந்தார்.

    பின்னர் அவர் வட்டப்பாறையை சேர்ந்த சோனைமுத்து (31), கரிசல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் தினேஷ் (10) ஆகியோரை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். கோனூர் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த வாகனம் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்ஹென்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வத்தலக்குண்டு அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தி.மு.க. பிரமுகரின் மகன் உடல் நசுங்கி பலியானார்.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு காந்திநகர் ராஜாஜி தெருவை சேந்தவர் சன்னாசி. இவர் தி.மு.க. பிரமுகர். இவரது மகன் வாசிமலை (வயது31). வெங்கிடாஸ்திரி கோட்டையில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருணம் ஆகி நிவேதா (23) என்ற மனைவியும் வருண் என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு ஓட்டல் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். ஆ பிரிவு என்ற இடத்தில் வந்தபோது எதிரே எம்.குரும்பபட்டியை சேர்ந்த ராமமூர்த்தி, முருகன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வாசிமலை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். ராமமூர்த்தி மற்றும் முருகன் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் போலீசார் அங்கு வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த திமுக பிரமுகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மழையூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் ( வயது 68) மாவட்ட முன்னாள் தி.மு.க. கவுன்சிலர். இவருக்கு சொந்தமான மரம் அறுக்கும் நிலையம் அதே கிராமத்தில் உள்ளது.

    கடந்த 17-ந் தேதி மரம் அறுக்கும் பட்டறையில் இருந்து தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட இடது புறமாக பைக்கை திருப்பினார்.

    அப்போது சாலையோர கல்லில் பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த கமலக்கண்ணன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக வடவணக்கம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    தக்கலை அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 35).

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி திக்கணங்கோட்டிற்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றார். அங்கு பொருட்களை வாங்கி விட்டு தனது உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    புதூர் பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக நிலைத் தடுமாறிய ராஜேஸ்வரி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்தனர்.

    ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜேஸ்வரி இறந்துவிட்டார். இதுபற்றி ராஜேஸ்வரியின் தாயார் வசந்தகுமாரி தக்கலை போலீசில் புகார் செய்தார். தக்கலை போலீசார் இந்த விபத்துபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சாலையோர தடுப்பில் மோதி பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    மதுரை பெருங்குடி அருகில் உள்ள பெரிய ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சோணை (வயது26). இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வலையப்பட்டி-பெரிய ஆலங்குளம் ரோட்டில் ரைஸ்மில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட சோணை படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சோணை வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக சோணையின் தந்தை ராமன் பெருங்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாடிப்பட்டி அருகே உள்ள மலையாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (30). இவர் பழனிக்கு பாதயாத்திரை சென்றார்.

    மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் தனிச்சியம் சந்திப்பு அருகே சென்ற போது வேன் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் படுகாயம் அடைந்தார்.

    இதுதொடர்பாக ராஜ்குமாருடன் பாதயாத்திரை சென்ற கொடிக்குளம் சேவுகன் (55) கொடுத்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வக்கீல் சம்பவ இடத்திலேயே பலியானார். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    பேரையூர்:

    திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகே உள்ள பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வக்கீல் மருதுபாண்டி (வயது34). இவர் பேரையூர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மாலையில் மதுரையில் அலுவலகப்பணி காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் பேரையூர் வந்து கொண்டிருந்தார்.

    கப்பலூர் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது மருதுபாண்டி ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் கீழே விழுந்த மருதுபாண்டியன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கப்பலூரைச் சேர்ந்த ராசு மகன் லோகநாதன் (22), சிவகாசி அரசரடி காலனியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் மாரீஸ்வரன் (28) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    ஜேடர்பாளையம் அருகே டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் டாஸ்மாக் சூப்பர்வைசர் பலியானார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம், கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 38).

    இவர் ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு 7 மணியளவில் ஜேடர்பாளையத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கள்ளுக்கடை மேட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வழியில் கொத்தம்மங்கலம் என்ற இடத்தில் தார்சாலை ஓரமாக டிராக்டர் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பகுதியில் மின்வெளிச்சம் ஏதும் இல்லை.

    இதனால் அந்த பகுதி இருட்டாக இருந்ததால் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த விஜயகுமார், தார்சாலை ஓரமாக டிராக்டர் நிறுத்தி வைத்திருப்பது தெரியாமல் எதிர்பாராத விதமாக அதன்பின்புறத்தில் வேகமாக மோதினார்.

    இதில் அவர் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஜேடர்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலியான விஜயகுமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். #tamilnews
    மலேசியாவில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்த வாலிபர் திருமங்கலம் 4 வழிச்சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
    பேரையூர்:

    மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அருண்தமிழரசு. மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீலாக உள்ளார். இவரது மகன் பாலஸ்ரீஹரி (வயது22).

    இவரது சித்தப்பா சக்திவேல் மகன் பிபின்குமார் (18). மலேசியாவில் வசித்து வரும் இவர் சமீபத்தில் ஊருக்கு வந்தார்.

    நேற்று பிபின்குமார், சகோதரர் பாலஸ்ரீஹரியுடன் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் 4 வழிச்சாலையில் சென்றார். தனக்கன் குளம்-வேடர்புளியங்குளம் சந்திப்பில் சென்றபோது விருதுநகரில் இருந்து மதுரை வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் பிபின்குமார் உள்பட 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிபின்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாலஸ்ரீஹரி அஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    முதலமைச்சர் பாதுகாப்பு பணி முடிந்து வீடு திரும்பிய போலீஸ்காரர் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்தார்.
    சென்னை:

    தண்டையார்பேட்டை சின்னசாமி தெருவை சேர்ந்தவர் தேஸ்குமார் (40). இவர் பெரியமேடு போக்குவரத்து போலீசில் போலீஸ்காரராக இருந்தார். கடந்த 8-ந்தேதி அன்று தலைமை செயலகம்-போர் நினைவு சின்னம் இடையே முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதனால் தலை மற்றும் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், வித்யா ஸ்ரீ (8), யுவஸ்ரீ (7), என்ற 2 மகள்களும், தர்மிக் என்ற 8 மாத ஆண்குழந்தையும் உள்ளன. #tamilnews
    கும்பகோணத்தில் 2 மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவன் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் மேல புளியபேட்டையை சேர்ந்த சண்முகம் மகன் காளீஸ்வரன் (வயது 22).இவரும், காமராஜர் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அஜித்குமார் (16). என்பவரும் நேற்று இரவு ஒருமோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் கும்பகோணம் பைபாஸ் சாலையில் சென்றபோது பெருமாண்டியை சேர்ந்த ஸ்ரீஹரி (18) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் மடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.காயமடைந்த ஸ்ரீஹரியை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    விபத்தில் பலியான அஜித்குமார் பிளஸ்-2 மாணவர் ஆவார். தனியார் பள்ளியில் படித்து வந்தார். காயமடைந்த ஸ்ரீஹரி அரியலூர் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த விபத்து குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×